search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனைவியை கொன்ற கணவர்"

    • போலீசார் விசாரணையில் கூலிப்படை மூலம் கணவர் மனைவியை கார் ஏற்றி கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
    • மனைவியை கொலை செய்வதற்காக கூலிப்படைக்கு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் சந்த். இவரது மனைவி ஷாலு.

    கடந்த அக்டோபர் மாதம் 5-ந்தேதி ஷாலு தனது உறவினர் ராஜூவுடன் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது கார் ஒன்று அவர்கள் மீது மோதியது. இதில் இருவருமே சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    இதை போலீசார் சாலை விபத்தாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த வழக்கும் நிறைவு பெற்றுவிட்டது.

    இதற்கிடையே ஷாலு மரணம் அடைந்தால் அவரது பெயரில் இருந்த இன்சூரன்ஸ் பணமான ரூ.1.90 கோடியை மகேஷ் சந்த் பெற்றார். இந்த விவரம் போலீசாருக்கு தெரிந்தபோது விபத்து வழக்கை மீண்டும் விசாரித்தனர்.

    போலீஸ் விசாரணையில் அது விபத்து அல்ல என்றும், மனைவி ஷாலுவை திட்டமிட்டு அவரது கணவர் மகேஷ் சந்த் படுகொலை செய்ததும், தெரியவந்தது.

    தனது மனைவி பெயரில் இருந்த காப்பீட்டு தொகையை பெறுவதற்காக அவர் சாலை விபத்து போல நாடகமாடியது அம்பலமாகி உள்ளது.

    கூலிப்படை மூலம் அவர் மனைவியை கார் ஏற்றி கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அவர் கூலிப்படைக்கு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக போலீசார் மகேஷ் சந்த் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ளனர்.

    • குடியை மறப்பதற்காக ஈரோட்டில் உள்ள கோவிலுக்கு சென்று கையில் கயிறு கட்டி விரதம் இருக்குமாறு குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
    • அதன்படி கோவிலுக்கு சென்று கயிறு கட்டிய பிறகும் நேற்றுஇரவு கருப்புசாமி மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகில் உள்ள ரெட்டியபட்டி லக்கான்தெருவை சேர்ந்தவர் கருப்புசாமி(39). டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி கற்பகம்(30). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். கருப்புசாமிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.

    இதனை மறப்பதற்காக ஈரோட்டில் உள்ள கோவிலுக்கு சென்று கையில் கயிறு கட்டி விரதம் இருக்குமாறு குடும்பத்தினர் கூறியுள்ளனர். அதன்படி கோவிலுக்கு சென்று கயிறு கட்டிய பிறகும் நேற்றுஇரவு கருப்புசாமி மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த கருப்புசாமி கத்தரிகோலால் தனது மனைவியின் கழுத்தில் பயங்கரமாக குத்தினார். இதில் கற்பகம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வடமதுரை இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் ஆகியோர் விரைந்து வந்து கற்பகத்தின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கருப்புசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் கொலை செய்யப்பட்டு, தந்தை கைது செய்யப்பட்டதால் அவரது 3 மகள்களும் ஆதரவின்றி கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இது அங்கிருந்த மக்களை மனம் உருக வைத்தது.

    • சுந்தருக்கும், லட்சுமிக்கும் இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது.
    • குடிபோதையில் இருந்த சுந்தர் ஆத்திரத்தில் அருகே கிடந்த அரிவாள்மனையை எடுத்து லட்சுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய கோட்டை பகுதியை சேர்ந்தவர் சுந்தர். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது முதல் மனைவி கலா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.

    இதனால் கோபித்து கொண்டு கலா தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பெங்களூருவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதையடுத்து லட்சுமி என்ற பெண்ணை சுந்தர் 2-வதாக திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களுக்கும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று இரவு சுந்தருக்கும், லட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது குடிபோதையில் இருந்த சுந்தர் ஆத்திரத்தில் அருகே கிடந்த அரிவாள்மனையை எடுத்து லட்சுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார்.

    இதில் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடி துடித்து லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இன்று காலை லட்சுமி வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது கழுத்து அறுக்கப்பட்டு லட்சுமி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடும்ப தகராறில் கணவன் மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • குடிபோதையில் வீட்டிற்கு வந்த கிருஷ்ணன் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.
    • தகராறு முற்றவே ஆத்திரமடைந்த கிருஷ்ணன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கற்பகத்தை சரமாரி குத்தினார்.

    குடிமங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கம் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 70). இவரது மனைவி கற்பகம் (60). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அவர் திருமணமாகி மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார்.

    கிருஷ்ணன் கிளி ஜோதிடம் பார்த்து வந்தார். மேலும் அவருக்கு மது பழக்கம் இருந்து வந்தது. தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். கற்பகத்தின் நடத்தையிலும் சந்தேகப்பட்டுள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே தினமும் தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்றிரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த கிருஷ்ணன் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றவே ஆத்திரமடைந்த கிருஷ்ணன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கற்பகத்தை சரமாரி குத்தினார். இதில் அவரது கை, தலையில் பலத்த கத்திக்குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில்அலறி துடித்த அவரது அலறல்சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    அப்போது கற்பகம் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது குறித்து உடனடியாக குடிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கற்பகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கிருஷ்ணனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நடத்தை சந்தேகத்தில் மனைவியை ஜோதிடர் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×